சினிமா துறையில் கால் பதிக்கிறார் விஜய் சேதுபதியின் மகன்!

415

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். தன் முதல் படத்திலே திருடனாக நடிக்கிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

சேதுபதி பட இயக்குனர் அருண் குமார், தற்போது விஜய் சேதுபதி மற்றம் அவர் மகன் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம் ‘சிந்துபாத்’. இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில், தந்தை மற்றும் மகன் இருவரும் திருடனாக நடிப்பதாகவும், இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்த் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.ஒரு எளிய மனிதன் தன் எளிய வாழ்வை வாழ எவ்வளவு தடைகள் இந்த சமூகம் உருவாக்கி உள்ளது எனவும் , அதற்கு தீர்க்கமான தீர்வை இப்படம் வெளிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாருங்க:  நடிகை சாயிஷா கர்ப்பமா? - இன்ஸ்டாகிராம் பதிவால் அதிர்ச்சி