சாய் பல்லவியுடன் திருமணமா? இயக்குநர் விஜய் மறுப்பு!

325

சாய் பல்லவி மற்றும் இயக்குநர் விஜய் ஒன்று சேர்ந்த படம் ‘தியா’. த்ரில்லர் பேய் படமான இப்படத்தை, இயக்குநர் விஜய் இயக்கி, சாய் பல்லவி நடித்துள்ளார். அதன் மூலம், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது.

இயக்குநர் விஜய்க்கு நடிகை அமலாபாலுடன் திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அதற்கு பிறகு, அமலாபால் ராட்சசன், பாஸ்கர் ஒரு ரஸ்கல் போன்ற படங்களில் நடித்தார்.

இயக்குநர் விஜய் ‘வாட்மேன்’ , ‘தேவி 2’ என இயக்கிக் கொண்டு உள்ள நிலையில், ஜெயலலிதா கதையை படமாக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அவரும், படங்கள் எடுப்பதில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில், சாய்பல்லவிக்கும், விஜய்க்கும் திருமணம் என செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் இருந்து, இச்செய்தி உண்மை இல்லை எனவும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுபற்றி இயக்குநர் விஜய் எதுவும் கூறவில்லை.

பாருங்க:  விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதல்வர் விசாரிப்பு