cinema news
கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ ட்ரைலர் வெளியானது!
கௌதம் கார்த்திக், ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திற்கு பின், நடித்திருக்கும் படம் ‘தேவராட்டம்’. கௌதம் கார்த்திக் நடித்து, கிரீன் ஸ்டுடியோஸ், ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார்.
மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சீரியல் நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். கிராம கதையாக அமைந்துள்ள இக்கதை, சண்டை காட்சிகள் நிரம்பிய படமாக அமைந்துள்ளது.
நிவேஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எனிலும், இப்படத்தில் ‘நவரச இளவரசன்’ என்ற பட்டத்துடன் நடிக்கிறார் கௌதம் கார்த்திக். இந்நிலையில், கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது.
மேலும், YouTube-லும் இப்பட ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. கௌதம் கார்த்திக்கின் மாறுப்பட்ட நடிப்பை அனைவரும் ரசித்து வருகின்றனர்.
Devarattam Official Trailer | Gautham Karthik, Manjima Mohan | Muthaiya | Nivas K Prasanna