கவுண்டமணி செந்தில் காமெடி ஹிட்டுக்கு மெய்ன் இவர்தான் – காமெடி ரைட்டர் வீரப்பன்

கவுண்டமணி செந்தில் காமெடி ஹிட்டுக்கு மெய்ன் இவர்தான் – காமெடி ரைட்டர் வீரப்பன்

பல வருடம் முன்பு வந்த கீதாஞ்சலி படத்திலிருந்து ஒரு காமெடி , இரண்டு பேர் குதிரையில ஏறிக்கிட்டு நாங்க தூய்மையான லவ்வர்ஸ் அப்படினு சொல்வாங்க இப்போ லவ்வர்ஸ்னு சொல்லுவிங்க அப்புறம் கல்யாணம் ஆயிடும் கொஞ்ச நாள் வாழ்விங்க அப்புறம் நாங்க பிரிஞ்சுட்டோம் இனி சேர்ந்துவாழ மாட்டோம் எங்களுக்குள்ள கருத்து ஒற்றுமையெல்லாம் இல்ல நாங்க நண்பர்களாவே இருப்போம் அப்படீனு பேட்டி கொடுப்பிங்க பிரிஞ்சுட்டா நாயி போகவேண்டியது தானே அப்புறம் என்ன நண்பர்கள் என கவுண்டமணி கவுண்ட்டர் அடிப்பார்.

இப்போது கடுமையாக இருக்கும் இது போல கணவன் மனைவி பிரிவின்மை, விவாகரத்து பிரச்சினையை 30வருஷத்துக்கு முன்பே ஆய்வறிந்து தீர்க்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருப்பார் நகைச்சுவை வசனகர்த்தா வீரப்பன் அவர்கள்

இவர் காமெடியோடு சேர்த்து நச்சென்று கருத்து சொல்பவர்.இவனுக மட்டும்தான் பொறந்தானுகளா இந்தியாவுல நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா அதாவது 35 வயசுக்கு மேல போங்கடானா போய் தொலைய மாட்டேங்கிறானுக அதே 35 வயசுலயே இருக்கானுங்க போன்ற புகழ்பெற்ற வசனங்களை எழுதியவர் இவர்.

கரகாட்டக்காரன் படத்தில் இளையராஜாவின் பாடல்கள்,கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளால் படம் 400 நாட்களை கடந்து ஓடியது ஒரு காரணம் என்றாலும் காமெடி காட்சிகளுக்கு இவரின் ஷார்ப்பான காமெடி வசனங்களும் ஒரு காரணம்.

அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களில் நாகேசுடன் காமெடி செய்தவர் நகைச்சுவை வசனகர்த்தா வீரப்பன்.

தனித்தனியாகவும் ஏதோ ஒரு சில படங்களில் சேர்ந்தும் நடித்துக்கொண்டிருந்த கவுண்டர்,செந்தில் ஜோடியை உதயகீதம் படத்தின் மூலம் தொடர்ந்து ஜோடியாக்கி நடிக்கவைத்தார் உதயகீதம்,கரகாட்டக்காரன்,தங்கமான ராசா,கீதாஞ்சலி,தர்மபத்தினி, உள்ளிட்ட பல படங்களில் கவுண்டர்,செந்தில் ஜோடியை அருமையான வசனங்கள் மூலம் ஹிட்டாக்கியவர் இவர்.

வசனகர்த்தாவாக மட்டுமல்லாமல் நாகேஷ் நடித்த பல படங்களில் அவருடன் சேர்ந்து காமெடி செய்துள்ளார் பலருக்கும் இவரது வசன நடையில்  பிடித்த படம் என்றால் அது கரகாட்டக்காரனாக இருக்கலாம். செந்தில் ஒரு வெற்றிலையை வாங்கிக்கொண்டு ஒரு டப்பா சுண்ணாம்பை வாங்கிகொண்டு வரும் காமெடி செந்தில்: அண்ணே நான் சின்னப்பையந்தானே என்ன கொஞ்சம் திருத்தக்கூடாதா கவுண்டர்: உன்னைய மாதிரி 80 கோடி பேர் இருக்கான் இந்தியாவுல உங்களை திருத்துறது என் வேலையில்ல முதல்ல என்னைய நான் திருத்திக்கிறண்டா இது போல பல வசனங்கள் சில படங்களில் பழைய பழமொழிகளை சாடுவார் ஏண்டா காலத்துக்கும் கண்டவன் சொன்னதையே கேட்டுக்கிட்டு அழுகுறிங்க சொந்தமா யோசிங்கடா என்று சில படங்களில் வசனம் இருக்கும்.

இவரின் காமெடி வசனத்தில் பம்பர் ஹிட் அடித்த காமெடி உதயகீதம் படத்தின் தேங்காய் காமெடி கரகாட்டக்காரன் படத்தின் வாழைப்பழ காமெடி குறிப்பாக இந்த வாழைப்பழ காமெடிக்கு கின்னஸ் ரெக்கார்டே கொடுக்கலாம் அந்த அளவிற்க்கு புகழ்பெற்றது முதுமையின் காரணமாக சில வருடங்கள் முன் இவர் மறைந்துவிட்டார்.