களவாணி 2 விவகாரம்

களவாணி 2 விவகாரம் – இயக்குனர் சற்குணத்திற்கு கொலை மிரட்டல்

களவாணி 2 பட விவகாரம் தொடர்பாக தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாக தயாரிப்பாளர்கள் இருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக அப்படத்தின் இயக்குனர் சற்குணம் காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.

2010ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த களவாணி. இப்படத்தில் நடித்த விமல் மற்றும் ஓவியாவை வைத்து இப்படத்தின்  2ம் பாகத்தை சற்குணம் இயக்கியிருந்தார்.

ஆனால், இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து இப்படத்தை ஜூன் 10ம் தேதி வரை வெளியிட நீதிபதி இடைக்காலத்தடை விதித்தார். நடிகர் விமலுக்கும், அவர்களுக்கும் இடையே பணப்பிரச்சனையில் இந்த தடையை அவர்கள் பெற்றனர். எனவே, இதை எதிர்த்து சற்குணம் மேல் முறையீடு செய்தார். எனவே, படத்துக்கான தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், களவாணி 2 படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன் மற்றும் காமரன் என இருவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவு காவல் நிலையத்தில் சற்குணம் புகார் அளித்தார். மேலும், நடிகர் விமல் இப்படத்திற்கு தயாரிப்பாளர் போல போலி ஆவணங்களை தயாரித்துள்ளர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.