“ஜெயம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் பெற்றவர் ரவி. அந்த படத்திற்கு பின்னர் “ஜெயம்” அடைமொழியாக மாறி இன்று வரை அவரது பெயர் திரை உலகில் “ஜெயம்”ரவியாகவே இருந்து வருகிறது. நடிக்க துவங்கிய நேரத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவற்பை கொடுத்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.
சாக்லேட் பாய், காதல் படங்களில் நடித்து ரொமேன்டிக் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த இவர் சமுதாயத்திற்கு கருத்து சொல்லக்கூடிய அழுத்தமான கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத்துவங்கினார். இதில் அதிக வெற்றிகளையும் பெற்றார். “பேரான்மை” படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் படியாக அமையந்தது.
“தனி ஒருவன்” படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்த இவர் நடிப்பில் அசத்தியிருக்க, போட்டி போட்டுக்கொண்டு ஈடுகொடுத்து நடித்திருப்பார் அரவிந்த்சாமியும். “நிமிர்ந்து நில்” படத்தின் தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்திருப்பார். அதன் பின்னர் திரிஷாவுடன் இணைந்து “சகலகலா வல்லவன்” படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. அதன் பின்னர் தொடர்ச்சியாக சரிவுகளை சந்தித்து வந்த இவருக்கு “கோமாளி” படம் சற்று தூக்கி நிறுத்தியது இவரது மார்க்கெட்டை.
மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பெரிய அளவில் எடுபடாமல் போனது “சைரன்” படம் “ஜெயம்” ரவிக்கு.
சொல்லும் படியான வெற்றியோடு கம்-பேக் கொடுக்க காத்திருக்கும் “ஜெயம்” ரவியை வைத்து கிருத்திகா உதயநிதி “காதலிக்க நேரமில்லை” படத்தை இயக்கியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் வரவிருக்கிறது இந்த படம். படத்தினுடைய கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை வெளியானது.
நித்யா மேனனும், கதையின் நாயகன் “ஜெயம்”ரவியும் இரவு நேரத்தில் ஊஞ்சல் ஆட, அதன் பின்னனியில் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் பாடலுடன் வெளியாகியுள்ளது வீடியோ.
இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வரும் “ஜெயம்” ரவியை கைகொடுத்து காப்பாற்று வாரா இயக்குனர் கிருத்திகா உதயநிதி என்பதே “ஜெயம்”ரவி ரசிகர்களின் எண்ணமாக இருக்கும் வீடியோ வெளியான பின்னர்.