தான் காதலில் விழுந்துவிட்டதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் பொய் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேச தெரிந்த நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை, சாமி 2, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஒருவரின் தம்பியின் மீது அவர் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், இதை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் “என்னை பற்றி வதந்திகள் பரவி வருகிறது. எனக்கும் அது யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.. என்னைப்பற்றி வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்.. நான் காதலில் விழுந்தால் உங்களிடம் நானே முதல் ஆளாக தெரிவிப்பேன். நான் சிங்கில் மற்றும் சந்தோஷமாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.