பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் எடுக்கவுள்ள ஐயப்பன் பற்றிய படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள ‘ஸைலன்ஸ்’ படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. அந்த படத்தை அடுத்து சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள ஐயப்பன் கதை கொண்ட ஆன்மிக படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார்.
மேலும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார் என்றும் இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்கா நடிப்பது உறுதியாகி உள்ள நிலையில்,அனுஷ்கா இதை குறித்து எதுவும் கூறவில்லையாம்.