ஏ.ஆர். ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைக்கு வருகிறது!

514

ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர். ரஹ்மான் கதாசிரியராக அறிமுமாகி தயாரித்துள்ள திரைப்படம் “99 சாங்ஸ்”. ஒய்.எம் மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது. விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 2 வருடமாக ரகுமான் படத் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், இப்படம் ஜூன் 21 வெளியாகவுள்ளது.

“99 சாங்ஸ்” என்ற பெயரில் தயாராகும் இப்படம், ரொமாண்டிக், காதல் படமாக உருவாகியுள்ளது. இப்படம், இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ‘இசை புயல்’ லே, இசை அமைத்துள்ளார்.இதுகுறித்து, ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது, நான் தயாரித்து, எழுதியிருக்கும் “99 Songs” படமானது, இசையை மையமாக கொண்டு உருவானது. உணர்வுபூர்வமான காதல் கதையை உணர்த்தும் இப்படம் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

”99 சாங்ஸ்” திரைப்படம் சர்வதேச அளவில், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வரும் ஜூன் 21 அன்று வெளியாகும். என் மீது நீங்கள் அனைவரும் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

பாருங்க:  தயாரிப்பாளராக மாறிய அமலாபால்!