cinema news
எந்த பெண்ணுடன் திருமணம்? – நடிகர் சிம்பு விளக்கம்
தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக எழுந்த செய்தி குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து அடிக்கடி செய்தி வெளியாவதும் அதை அவர் மறுப்பதும் வாடிக்கையான ஒன்று. சமீபத்தில் சிம்புவின் சகோதரர் குரளரசன் திருமணம் செய்து கொண்டார். அப்போது, சிம்புவின் திருமணம் குறித்து டி.ராஜேந்திரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, இந்த கேள்வியை நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள் .ஆனால், இதற்கு பதில் சொல்ல முடியாத நிலையில் சிம்பு என்னை வைத்துள்ளார் என கண்ணீர் மல்க பதிலளித்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்புவின் உறவினர் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது எனவும் செய்திகள் பரவியது.
ஆனால், தற்போது சிம்பு இதை மறுத்துள்ளார். எனக்கு யாருடனும் திருமணம் நிச்சயக்கவில்லை. அப்படி இருந்தால் அதை நானே முதலில் தெரிவிப்பேன். தற்போது வெளியாகி வரும் செய்தி அனைத்தும் வதந்தி என சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.