cinema news
எதிரியாய் மாறிய வடிவேலு!..சந்தானம் கூட சிங்கமுத்து நடிச்சது அவ்ளோ பெரிய தப்பா?…
சின்ன, சின்ன துக்கடா கேரக்டர்களில் நடித்து, அதில் நகைச்சுவை கலந்தும், தனது சொந்த குரலில் பாடல்களை பாடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ‘வைகை புயல்’ என்ற அடைமொழியும் பெற்றவர் வடிவேல்.
ரஜினி,கமல்,அஜீத்,விஜய் என இவருடன் நடிக்காத கதாநாயகர்களே கிடையாது என்று சொல்லலாம். நடிகர் வடிவேல் தனது குழுவினருடன் படங்களில் நகைச்சுவை செய்வதை ஒரு கட்டத்திற்கு பிறகு பழக்கப்படுத்தி கொண்டார்.
‘போண்டா’மணி, ‘தாடி’பாலாஜி, ‘அல்வா’ வாசு உள்ளிட்டோரும் அதில் அடங்குவர்.இந்தக் குழுவில் முக்கியமான நபராக சிங்கமுத்து இருந்து வந்தார். ஆனால் சிங்கமுத்து, வடிவேலு இடையே தற்பொழுது மிகப்பெரிய வாய்க்கால் தகராறு நடந்து வருவது தெரிந்ததே.
இவர்கள் இருவரின் நகைச்சுவை ஆற்றலை கண்டு சிரித்து உருண்ட கூட்டம் இருந்து தான் வந்தது.
இருவரின் பிரச்சனைக்கு பிறகு இன்று வரை அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. வடிவேல் பற்றி பேசியிருந்த சிங்கமுத்து, வேறு நகைச்சுவை நடிகர்களுடன் தனது குழு நபர்கள் யாராவது நடிக்கச்சென்றால் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார் என்றார்.
சந்தானத்துடன் தான் இணைந்து நடித்த போது அங்க போய் இங்கு உள்ள ட்ரிக்ஸ் எல்லாத்தையும் காட்டி கொடுத்துட்டு வந்துட்டியா என கேட்டாராம். அவருடைய குழுவில் உள்ள நடிகர்கள் இவரைத்தவிர வேறு யாருடனும் இணைந்து நடிக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தும் வந்தாராம்.
விவேக் உடன் நடித்ததற்கு வடிவேலு ஒன்றும் சொல்லவில்லை என ‘போண்டா’மணி சொன்னதை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து. தனிமையில் இருக்கும் போது இதைப்பற்றி பேசி சண்டையிடுவாராம். விவேக்கை பார்த்தால் மச்சான் என்று பாசத்தோடு அழைத்துக்கொள்வார். இதுதான் வடிவேலுவினுடைய உண்மையான குணம் என்று சொல்லியிருந்தார்.