அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்துள்ள லிசா திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாக அஞ்சலி தமிழ் சினிமாவில் தலை காட்டவே இல்லை. தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடுவில் பேரன்பு படத்தில் மட்டும் தலை காட்டினார்.
தற்போது அவரின் நடிப்பில் பயங்கர திகில் காட்சிகளுடன் உருவாகியுள்ள படம் லிசா. ஏற்கனவே ஜெய்யுடன் பலூன் எனும் திகில் படத்தில் நடித்திருந்தார். தற்போது இது அவருக்கு 2வது பேய் படமாகும்.
தனது பாட்டி, தாத்தா வாழ்ந்த வீட்டிற்கு செல்லும் போது அங்கு ஏற்படும் அமானுஷ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்கியுள்ளார். சாம் ஜோன்ஸ் என்கிற புதிய முகவும், யோகிபாபு உள்ளிட்ட சிலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் 3டி தொழில் நுட்பத்திலும் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.