cinema news
உடனடியாக யூ டியூப்பில் வெளியான சூரரை போற்று- படக்குழு அதிர்ச்சி
இன்று காலை சூரரை போற்று படம் அமேசானில் வெளிவருவதாக இருந்தது அதன்படி வெளியானது ஆனால் வேறு சில நாடுகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது. ரசிகர்களால் பரவலாக பாராட்டு பெற்று வரும் இந்த படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே யூ டியூப்பில் வெளியாகி விட்டது.
இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இது போன்ற புதிய திரைப்படங்களை ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஸ்க்ரீன் கேப்சர் சாப்ட்வேர்களை கொண்டு எளிதாக காப்பி செய்து வைக்க முடியும்.
எனினும் யூ டியுப்பில் வெளியான சில மணி நேரங்களில் புகார் தரப்பட்டதால் உடனடியாக யூ டியூப் நிர்வாகம் சூரரை போற்று படத்தை யூ டியூப்பில் நீக்கி விட்டது.