இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

363
இயக்குனர் மகேந்திரன் மரணம்

இயக்குநர் மகேந்திரன் 1978ல் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
ஜானி, ஊர் பஞ்சாயத்து, சாசனம், மெட்டி, கை கொடுக்கும் கை, அழகிய கண்ணே உள்ளிட்ட 12 படங்களை இயக்கியவர். ரஜினி, பாண்டியராஜன், மோகன், அரவிந்த் சாமி, சரத் பாபு, ரேவதி, ஸ்ரீதேவி, சுஹாசினி ஆகியோரை இயக்கியவர் மகேந்திரன்.

பல வருடங்களாக, தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த மகேந்திரன், தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தில், வில்லனாக நடித்தார். மேலும், ரஜினி நடிப்பில் உருவான பேட்டை படத்திலும் நடித்திருப்பார்.

அவர், சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிறுநீரக கோளாறால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு டையாலிஸிஸ் செய்து வரப்பட்டது.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 2 ) அதிகாலை 7.30 உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது மறைவை, அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவரது மறைவுக்கு, பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் மரணம்!