cinema news
இந்த மெட்டு எனக்கு பிடிக்கல…இளையராஜாவிடம் நோ சொன்ன நாசர்…எந்த பாட்டு அது?…
வில்லானக மட்டுமே பார்க்கப்பட்டவர் நாசர். கமல்ஹாசனுடன் இவர் நடித்த “தேவர் மகன்”, இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது நகைச்சுவை வேடங்களிலும் கலக்கியிருப்பார். மொத்ததில் சொல்லப்போனால் இவர் ஒரு ‘ஆல்-ரவுண்டர்’.
நாசர் இயக்குனராகவும் பணியற்றியிருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் இவரின் பெயரை என்றும் சொல்லக்கூடிய படம் “அவ்வை ஷண்முகி”. ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், கமலுடன் இவர் செய்த சேட்டைகள் ரசிக்கும் படியாகயிருந்தது.
இயக்குனாராக இவர் மாறியதும் இவரது பெயரை இன்றும் சொல்ல வைக்கும் படமாக அமைந்தது “அவதாரம்”. இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. பாடலில் குறிப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இதனை பாடியது இளையராஜா.
இந்த பாடலுக்கான மெட்டினை முதலில் கேட்டபோது, இது தனக்கு பிடிக்கவில்லை என இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அவரோ இல்லை இது நன்றாக வரும், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என அனுப்பி வைத்தாராம் நாசரை.
பின்னர் இளையராஜவை பாடலுக்காக சந்தித்த போதும், அதே மெட்டில் தான் இளையராஜா பாடினாராம். முதலில் ஹார்மோனியத்தை இசைத்து மட்டுமே பாடிகாட்டியிருந்திருக்கிறார். பின்னர் பிற கருவிகளோடு பாடலை அவர் பாடியதை கேட்ட நாசர் அசந்து போனாராம். அதை கேட்டதும் நாசர், நான் சொன்னதை எல்லாம் மறந்து என்னை மண்னித்து விடுங்கள் எனக்கேட்டாராம். அதோடு மடூமல்லாமல் இளையராஜவின் காலில் விழும் அளவுக்கே சென்று விட்டாராம் நாசர். இளையராஜா கணித்த கணிப்பு நூறு சதவீதம் சரியாக இருந்து அந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது இந்த பாடலே.