இந்தியன் 2 -வில் ஆர்யா – இன்னும் யார் யார்?

469

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 வில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியன் வெளியாகி பல வருடங்களுக்கு பின் இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல்ஹாசனும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். இப்படத்தில் கமல்ஹாசனின் மகன் வேடத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், திடீரென அவருக்கு பதில் நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், கால்ஷீட் காரணமாக சிம்பு நடிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஆச்சர்யப்படும்படியாக இப்படத்தில் நடிகர் ஆர்யா நடிப்பது தெரியவந்துள்ளது. இந்தியன் 2-வில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆர்யாவிடம் படக்குழு பேசி வருகிறது. இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், பெரிய நிறுவனம், பெரிய படம் என்பதால் கண்டிப்பாக இந்த வாய்ப்பை ஆர்யா தவற விட மாட்டார் என கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Arya plays important role indian 2

பாருங்க:  அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு – கொரொனா தடுப்பில் ஆற்றிய முக்கிய பணி!