ஆர்யா, அதர்வா இணயும் பாலா படம்!

237
ஆர்யா அதர்வா இணயும் பாலா படம்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் முழுமை அடைந்தும், அந்த படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காத காரணத்தால், படம் கைவிடப்பட்டுள்ளது. அப்படம் தெலுங்கு படமான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்.இப்படத்தில், விக்ரம் மகன் துருவ் மற்றும் ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஆனால், இப்படம் கைவிடப்பட்டதை அடுத்து, மேலும் அதே படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் அதே நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாலா, தனது அடுத்த படத்திற்காக பல ஊர்கள் சென்று பல்வேறு விஷயங்களை கற்று தேர்ந்த பின், தற்போது படத்தில் நடிக்க ஆர்யா மற்றும் அதர்வாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.பாலாவின் இயக்கத்தில் ‘நான் கடவுள்’ , ‘அவன் இவன்’ படங்களில் ஆர்யா மற்றும் அதர்வா ‘பரதேசி ‘ படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ஆர்யா சுந்தர் கூட்டணியில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகல் - காரணம் என்னாவது இருக்கும்??