அயோக்யா பட விவகாரம் – விஷால் ஆவேச டிவிட்!

266

அயோக்யா திரைப்படம் வெளியாகதது குறித்து நடிகர் விஷால் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரைக்கு பின் விஷால் நடித்த படம் அயோக்யா. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தெலுங்கில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவானது. வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படம் இன்று இப்படம் வெளியாகவில்லை. இதனால் முன்பதிவு செய்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, படம் ஏன் வெளியாகவில்லை என விஷாலின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்று இரவு இதுபற்றி டிவிட் செய்திருந்த விஷால் “இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கும் காலம் வரும். கண்டிப்பாக இப்படம் வெளிவரும்” என டிவிட் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் இதுபற்றி டிவிட் செய்துள்ள விஷால் “இதை நான் விடமாட்டேன். இப்படம் எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதை வலியுறுத்தும் படம். சினிமாவில் இதுபற்றி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கண்டிப்பாக படம்  வெளிவரும்” என குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  ஜிவி பிரகாஷின் இசையில் ஹாலிவுட் பாடகி பாடிய ஆல்பத்தை தனுஷ் வெளியிட்டார்