cinema news
‘அச்சமில்லை அச்சமில்லை’ பட டீஸர் வெளியாகியது – கமல் பாராட்டு!
‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. அமீர் தயாரித்து, நடித்துள்ள படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. இப்படத்தை அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கி உள்ளார்.
நடிகை சாந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், புது முகங்கள் நிறைய பேர் இப்படத்தில் நடித்துள்ளனர்.அருண் குமார் என்பவர் இசை அமைத்துள்ளார்.
அமீர், அரசியல்வாதியாக நடித்துள்ளார். நொய்யல் ஆறு மற்றும் அதை சுற்றி உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.”தெரு முழுக்க சாக்கடை இருந்தாலும், அதுல செங்கலை அடுக்கி கவனமா நடந்து போறதுக்கு பேரு புத்திசாலிதனம் இல்ல எஸ்கேப்பிஸம்”, என்ற வசனம் மனிதராகிய நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னனியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அமீர் : “ஒரு நல்ல கருத்தையும் கதையையும் கொண்டுள்ள படம் “. பாமர மக்களுக்காக, நடுத்தரமக்களுக்காக இப்படத்தை எடுத்துள்ளோம். இங்கு, மேல்தட்டு மக்கள் சினிமா பார்ப்பதும் இல்லை, வாக்களிக்க வருவதும் இல்லை. அரசியலுக்கு சினிமாக்காரர்கள் வரட்டும் என்றே நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
இப்பட டீஸரில், கமல் பேசி இருப்பது இணைந்து இருக்கிறது. கமல் கூறுகையில் :
‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தை எடுக்க துணிச்சல் வேண்டும், அதுமட்டுமில்லாமல் நேர்மை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பட டீஸரை வெளியிட்டுள்ளார்.