Connect with us

‘இனியும் என்னிடம் போராட சக்தி இல்லை’… ஓய்வு அறிவித்த வினேஷ் போகத்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

sports

‘இனியும் என்னிடம் போராட சக்தி இல்லை’… ஓய்வு அறிவித்த வினேஷ் போகத்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இதில் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்நிலீஸ் குஸ்மானை5-0 என்று புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலமாக ஒலிம்பிக் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பாக வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இறுதிப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டப்பிரண்ட் என்பவரை எதிர்கொள்ள இருந்தார். பின்னர் வினேஷ் போகத் உடல் 100 கிராம் எடை கூடி இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சு திராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தை சந்தித்தனர்.

பின்னர் தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். இவரது மேல்முறையீட்டை ஒலிம்பிக் போட்டி ரத்து செய்தது. இதை எடுத்து சர்வதேச மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார் வினேஷ் போகத். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அம்மா, மல்யுத்தம் எனக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்.

உங்கள் கனவு எனது நம்பிக்கை அனைத்தும் உடைந்து போனது. இனியும் என்னிடம் வலிமை இல்லை குட்பை ரெஸ்லிங் 2001 டு 2024. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். மன்னித்து விடுங்கள் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டு இருக்கின்றார். இது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

29 வயதான வினேஷ் போகத் அரியானவை சேர்ந்தவர். காமன்வெல்த் போட்டியில் ஹட்ரிக் தங்கம் வென்ற சாதனையாளர். பாலியல் சர்ச்சையில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும் பாஜக முன்னாள் எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்ய கோரி மாதக்கணக்கில் வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தியிருந்தார்கள். அதனை முன் நின்று நடத்தியவர்களில் வினேஷ் போகத்தும் ஒருவர்.

இதனால் மல்யுத்த சம்மேளம் தன்னை பழிவாங்கும் நோக்குத்துடன் நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். மத்திய அரசு வழங்கிய அனைத்து விருதுகளையும் திருப்பி வழங்குவதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படி பல்வேறு சவால்கள் இன்னல்களைக் கடந்து ஒலிம்பிக் களம் புகுந்த வினேஷ் போகத் பதக்க கனவானது வெறும் 100 கிராம் எடையில் தகர்த்து போனது. இதையடுத்து தனது ஓய்வை அவர் அறிவித்திருப்பது இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

More in sports

To Top