வினேஷ் போகத் ஒரு அற்புதமான போட்டியாளர்… தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை புகழாரம்…!

வினேஷ் போகத் ஒரு அற்புதமான போட்டியாளர்… தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை புகழாரம்…!

வினேஷ் போகத் ஒரு அற்புதமான போட்டியாளர் என்று தங்கப்பதக்கம் வென்ற சாரா ஹில்டெப்ரண்ட் புகழாரம் சூட்டியிருக்கின்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இதில் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்நிலீஸ் குஸ்மானை5-0 என்று புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலமாக ஒலிம்பிக் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பாக வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இறுதிப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டப்பிரண்ட் என்பவரை எதிர்கொள்ள இருந்தார். பின்னர் வினேஷ் போகத் உடல் 100 கிராம் எடை கூடி இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சு திராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தை சந்தித்தனர்.

பின்னர் தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். இவரது மேல்முறையீட்டை ஒலிம்பிக் போட்டி ரத்து செய்தது. இந்நிலையில் இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற பிறகு வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசி இருக்கின்றார்.

அதில் “வினேஷ் போகத்  தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் எனக்கு தங்கம் கிடைத்துவிட்டது என்று மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நான் இறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனை குஸ்மானுடன் மோத வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது நான் தங்கம் வெல்லவில்லை என்று நினைக்கும் போது எனக்கே வினோதமாக இருந்தது.

உடல் எடையை குறைப்பதில் நானே கைதேர்ந்தவள் தான். ஆனால் வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். அந்த நாள் அவளுக்கு ஒரு அற்புதமான நாளாக இருந்தது. அந்த நாளில் அவள் ஒரு பைத்தியக்காரத்தனமான சாதனையை செய்திருக்கிறாள். அவளின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் அவளை நினைத்து அனுதாபப்படுகின்றேன். நிச்சயம் அவர் ஒரு அற்புதமான போட்டியாளர், அற்புதமான மல்யுத்த வீரர் என்று நான் நினைக்கின்றேன்” என்று தெரிவித்தார்.