Connect with us

2-வது ஒருநாள் போட்டி… அத பத்தி நான் பேச விரும்பல… கேப்டன் ரோகித் சர்மா பேட்டி..!

sports

2-வது ஒருநாள் போட்டி… அத பத்தி நான் பேச விரும்பல… கேப்டன் ரோகித் சர்மா பேட்டி..!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி t20 தொடரை தொடர்ந்து தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இலங்கை மற்றும் இந்தியா அணியின் இடையிலான முதல் போட்டியானது சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டியானது நேற்றிரவு கொழும்புவில் நடைபெற்றது.

துவக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

எப்படி விளையாடினோம் என்பது பற்றியும் அதிகம் நான் பேச விரும்பவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் எங்கள் பேட்டிங் பற்றிய பேச்சு வார்த்தை நிச்சயம் இருக்கும். ஒரு போட்டியில் தோல்வி அடையும்போது எல்லாமே வலிக்கும். அந்த பத்து ஓவர்களை மட்டுமே கூறி விட முடியாது. தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும். அந்த வகையில் இன்று நாங்கள் தோற்று விட்டோம். சிறிது ஏமாற்றமாக தான் இருக்கின்றது. ஆனால் இதெல்லாம் நடக்கும். உங்கள் கண் முன் இருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

More in sports

To Top