sports
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி… இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா…!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்களது பதக்கங்களை கைப்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜனா, நீரஜ் சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜானா 80.73 ஈட்டி எறிந்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி விட்டார். இதையடுத்து குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட நீர் சோப்ரா தனது முதல் பயிற்சிலையே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றார்.