sports
மல்யுத்த போட்டி… கிராம்களில் கூடிய எடை… தகுதி நீக்கம் செய்த வினேஷ் போகத்க்கு ஆறுதல் சொன்ன மோடி…!
கிராமங்களில் எடை கூடியதால் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை பெற்றிருக்கின்றது. பதக்க பட்டியலில் 63வது இடத்தில் உள்ளது .
நேற்று இரவு நடைபெற்ற மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் இருவர் மோதினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ இடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிற்கு முன்னேறி இருந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்ப்ரெஸ்ட்டண்ட் என்பவரை எதிர்க்கொள்ள இருந்தார்.
இந்நிலையில் உடல் எடை வினேஷ் போகத்துக்கு சில கிராம்கள் கூடியிருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ்ட்ரா பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.” விக்னேஷ் நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன் நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.
தற்போதைய பின்னடைவு வேதனை அளிக்கின்றது. என் வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு என எனக்கு தெரியும். இளம் தலைமுறையினருக்கு வினேஷ் போகத் உந்து சக்தியாக இருப்பார். வலுவாக திரும்பி வாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்து இருக்கின்றார்.