Pallikalvi News
தமிழகம் முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம்
ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை அதர்மத்தை அழித்த வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்றுதான் அம்பிகை அசுரனை அழித்தாள் என்பது ஐதீகம் அதனால் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி வெற்றிக்குரிய நாளாக கருதப்படுவதால் அன்று எதை ஆரம்பித்தாலும் வெற்றி என்ற அடிப்படையில் புதிய தொழில்கள் அன்று துவங்குகின்றன. அன்றுதான் குழந்தைகளை பள்ளியிலும் சேர்க்கிறார்கள்.
நேற்று விஜயதசமி நாள் என்பதால் பல பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். நெல்லில் குழந்தைகள் பெயர் எழுதப்பட்டது. அ என்ற எழுத்தை நெல்மணியில் குழந்தைகள் எழுத சொல்வது ஒரு ஐதீகம் என்பதால் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் நெல்மணியில் தங்கள் பெயரை குழந்தைகளை எழுத வைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் அழகு பார்த்தனர்.
முதன் முதலில் அ போட்டு விஜயதசமி அன்று படிப்பை ஆரம்பித்தால் அந்த குழந்தை ஞானமிக்க குழந்தையாக வரும் என்பது நம்பிக்கை.
