தமிழக அரசு பள்ளிகளில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கல்வி துறை தொடர்பாக அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டியில் கூறியதாவது:
தனியார் பள்ளிகளுக்கு இணையாக மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 8,9,10,11,12 ஆகிய வகுப்புகளில் இண்டர்நெட் உடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும். அதேபோல், தமிழகத்தில் கற்றல் குறைப்பாடு உள்ள மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் திறனை வளர்ப்பதற்கு ரோபோ மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.