இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மாணவர்கள் அதிர்ச்சி!

343

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு கடை பிடிக்கப்படும் என தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள பாடதிட்டத்தின்படி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு கிடையாது. ஆனால், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேரவு நடத்த வேண்டும் என மத்திய அரசு தொடந்து கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதை ஏற்கவில்லை.

இந்நிலையில், தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்த ஆண்டு முதலே 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்வில் தோல்வி அடைந்தால் 2 மாதத்திற்குள் மறு தேர்வு நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பாருங்க:  ஜியோ போராட்டம் : பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கட்டம் கட்டும் அரசு