Teachers to be counted who participate in Protest - tamilnaduflashnews.com

ஜியோ போராட்டம் : பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கட்டம் கட்டும் அரசு

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தின் போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணிக்கு திரும்பும் படி அரசு கோரிக்கை வைத்தும் அவர்கள் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், போராட்ட நாட்களில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விபரங்களை பள்ளிக்கல்வி துறையின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்  என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.