ஆசிரியர்களின் சஸ்பெண்ட் ரத்து – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

250
Suspension on teachers is cancelled by tngovt

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணிக்கு திரும்பும் படி அரசு கோரிக்கை வைத்தும் அவர்கள் அதை ஏற்கவில்லை. அதன்பின், முதல்வரின் கோரிக்கையை ஏற்று அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதையடுத்து, போராட்ட நாட்களில் பள்ளிக்கு வராத சில ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1,111 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பாருங்க:  5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - செங்கோட்டையன் சொன்னது என்னாச்சு?