6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வண்ண சீருடைகள் வழங்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேனியில் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
5ம் வகுப்பு வரை 8ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவரக்ளுக்கு, அடுத்தாண்டு தனியார் பள்ளிகளை மிஞ்சம் வகையில் சிறந்த வண்ண சீருடைகள் மாற்றப்படும். அதேபோல், இந்த வருடம் 12ம் வகுப்பு படித்து முடித்தவர்கள், படித்துக்கொண்டிருப்பவர்கள், 11ம் வகுப்பு படிக்கிறவர்கள் என மொத்தம் 15 லட்சம் பேருக்கு இந்த மாத இறுதிக்குள் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.