2019 ப்ளஸ் 2 முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும் – முதுநிலை ஆசிரியர்கள்!

418

ப்ளஸ் 2 தேர்வு தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கிய நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளும் இருப்பதால், இரண்டையும் கவனிக்க இயலாத நிலையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளி வைக்க கோரியுள்ளனர்.

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி முடிவடைந்தது. அதையடுத்து நேற்று (மார்ச் 29) தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கியது.

இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது : மக்களவைத் தேர்தல் காரணமாக ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் இப்போது தொடங்கிஉள்ளன. இதுதவிர மாணவர்களுக்கான நீட் பயிற்சி, ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி தரப்பட்டுள்ளன.

இத்தகைய தொடர் பணிச்சுமைகளுக்கு இடையே ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது. இந்த சூழலில் குறைந்த கால அவகாசத்தில் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுத்துறை அழுத்தம் தருகிறது. இதற்கு சற்றே கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அதற்கேற்ப தேர்வு முடிவுகளை சில நாட்கள் ஒத்தி வைக்க அரசு முன்வர வேண்டும் என்றனர்.

பாருங்க:  சமூக வலைதளங்களில் வெளியானது 10 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டங்கள்!