2019ம் கல்வி ஆண்டில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.64%, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.57%. மொத்த தேர்ச்சி சதவீதம் 91.3%.
ப்ளஸ் 2 மாணவர்கள் , தங்கள் ரிசல்ட்டை www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.tnresults.nic.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட வாரியாக,அதிகபட்சமாக திருப்பூர் 95.37% சதவீதமும், ஈரோடு 95.23% சதவீதம், பெரம்பலூர் 95.15%, கோவை 95.1% பெற்றுள்ளது.குறைந்தபட்சமாக கிழுஷ்ணகிரி 86.79%, நாகை 87.45% பெற்றுள்ளது.அதே போல், ப்ளஸ் 2 மாணவர்கள் , ஏப்ரல் 20 முதல் 26 வரை தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். அதே போல், மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் , தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல்-29 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.