2019 ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 95% மாணவர்கள் தேர்ச்சி!

352

ப்ளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 95% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018 – 2019ம் கல்வி ஆண்டின் ப்ளஸ் 1 பொது தேர்வுகள் மார்ச் 6ல் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், மாணவர்கள் 93.3% தேர்ச்சியும், மாணவிகள் 96.5% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்வு முடிவுகள், மாணவர்கள் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், www.dge1.tn.nic.in, www.results.in, www.dge2.rn.nic.in என்ற இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

ப்ளஸ் 1 பொது தேர்விலும், ஈரோடு மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது. மாவட்ட அளவில் 98% தேர்ச்சி பெற்றுள்ளது. 97.9% திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடமும், கோவை மாவட்டமும், தூத்துக்குடி மாவட்டமும் 97.64% பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. குறைந்தபட்சமாக, 89.29% பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

பாருங்க:  2019 பொறியியல் கலந்தாய்வு - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது!