2019 ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது!

345
tamilnadu public exam result 2019

ப்ளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 8) வெளியாக உள்ளது. 2017-2018 கல்வி ஆண்டின் முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டின் பொது தேர்வு மார்ச் 6 முதல் 22 வரை நடைபெற்றது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,278 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும், 5032 தனி தேர்வர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் 6ல் துவங்கி 15க்குள் முடிக்கப்பட்டது. தற்போது, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணியும் முடிந்துள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம், குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இந்த மதிப்பெண்கள், ப்ளஸ் 2 தேர்ச்சிக்கு கணக்கில் எடுக்கப்படாது.

ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம், 35 மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே, ப்ளஸ் 2 வகுப்பிற்கு தேர்ச்சி பெற முடியும். இதில், தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதம் நடக்கவுள்ள சிறப்பு துணை தேர்வு அல்லது அடுத்த மார்ச்சில் நடக்கும் பொது தேர்வில், அவர்கள் பங்கேற்று தோல்வியுற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும்.

பாருங்க:  கொரோனோ பீதி - தமிழக பள்ளிக்கல்வித்துறையின் விடுமுறை அறிவிப்பு