பிளஸ் 2 பொது தேர்வுகள் நேற்று (19.03.2019) முடிவடைந்த நிலையில், தேர்வு தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1 ல் ஆரம்பித்து மார்ச் 19ல் முடிவடைந்தது. பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைத்து தேர்வுகளின் முடிவின் போது தேர்வு தாள்கள் எளிமையாக இருந்ததாக கூறினர்.
ஆனால், கடைசி நாள் தேர்வான உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை பாடங்கள் மட்டும் சிரிது கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த தேர்வுகள் 2,944 மையங்களில் நடைபெற்றது. அதில் 8.2. லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என்று தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.