தமிழகத்தில், மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று
( மார்ச் 14 ) பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது.
இதில், 9.97 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 3713 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வறைகளில் துண்டுத் தாள்களைப் பார்த்து எழுத முயற்சி செய்வது, பிற மாணவர்களின் விடைத்தாள்களைப் பார்த்து காப்பியடிப்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உருதுணையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீதான நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு மையங்களை கண் காணிக்க 5500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.