2019 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

2019 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95.02% தேர்ச்சி!

2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 95.02 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்விலும், திருப்பூர் மாவட்டமே 98.53% பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்தது. இதில், 9 லட்சத்து 92 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகளை, மாணவர்கள் அரசு இணையதளமான, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www. dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம். மேலும், மாணவர்களின் தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மாணவர்கள் மே 2ம் தேதி தாங்கள் படித்த பள்ளியின் மூலம், அல்லது ஆன்லைனின் மூலம், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.