10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிறது புது சிலபஸ்!

403
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிறது புது சிலபஸ்

வரும் ஜூன் 2019 கல்வி ஆண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நடப்பு ஆண்டில், 1, 6, 9, மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் 2017 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி, 2, 7, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, வரும் 2019-20 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்.
அதோடு, 3, 4, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் (2020-21) ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 3,4,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு வரும் 2019 ஜூன் மாதக் கல்வி ஆண்டிலே புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என பள்ளி கல்வி துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  2019 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95.02% தேர்ச்சி!