பள்ளி புத்தகங்களில் வருகிறது இந்திய விமானி அபிநந்தனின் கதை!

பள்ளி புத்தகங்களில் வருகிறது இந்திய விமானி அபிநந்தனின் கதை!

அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்திய விங் கமாண்டர் அபிந்தனின் வரவாறு, பாடப்புத்தகங்களில் இடம் பெற உள்ளது, என இராஜஸ்தான் பள்ளி கல்வி துறை அமைச்சர் அறிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு, பதிலடி தருவதற்காக இந்திய விமானப்படை கமாண்டர்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினர். அதில் 350 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.அப்போது தாக்குதல் நடத்த சென்ற விமானி அபிநந்தன், பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டார். பிறகு, நன்னடத்தையின் காரணமாக பாகிஸ்தான் இராணுவத்தினரால், இந்தியாவில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த வீர தீர செயலால், நாடே இவரைக் கொண்டாடியது. நாட்டு மக்களே இவரை ஹீரோவாக கொண்டாடினர்.
இதனால், அடுத்த ஆண்டு முதல் பாடப்புத்தகத்தில் இவரது பெருமை மிக்க கதை இடம் பெறும் என இராஜஸ்தான் பள்ளி கல்வி துறை அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.