கோடைக்கால விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு – பள்ளி கல்வித்துறை!

370
பள்ளி கோடைக்கால விடுமுறை

2018ம் கல்வி இறுதி ஆண்டில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கத்திற்கு அதிகமாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முழ ஆண்டு தேர்வு எனப்படும் 3ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதி நிறைவடைகிறது. அதன் பின் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த வருடம் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்வுகளை விரைவில் முடிக்க பள்ளிகல்வித்துறை திட்டமிட்டது. அதனால், தேர்வு நடைபெறும் நாட்களை முன்னதாக அறிவித்து, விரைவில் தேர்வுகளை முடிப்பதோடு கூடுதலாக கோடை விடுமுறை நாட்களையும் அதிகரித்துள்ளது.ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும், அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

பொது தேர்வு எழுதுகிற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் கடைசி நாளுக்குள் தேர்வுகள் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி - செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு