national
20 ரூபாய் சம்பாதிக்க இப்படி தான் உழைக்கணுமா…? வைரலாகும் zomato ஊழியர் வீடியோ…!
புது டெல்லி சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்னணி டெலிவரி நிறுவனமான zomatoவில் பணியாற்றி வருகின்றார். இவர் தினமும் ஒரு 20 ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது என்பது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த வீடியோவில் ரூபாய் 20 சம்பாதிக்க ஒரு ஜொமேட்டோ டெலிவரி ஏஜென்ட் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு காண்பிக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார். முதலில் அந்த நபர் ஆர்டர் ஒன்றை ஏற்றுக்கொள்கிறார். அதற்காக அவர் உணவகத்திற்கு செல்ல 1.5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்கு 5 நிமிடங்கள் காத்திருக்கின்றார்.
அவர் ஆர்டரை வழங்க வேண்டிய இடம் உணவகத்திலிருந்து 650 km தொலைவில் உள்ளது. ஆர்டரை டெலிவரி செய்த பிறகு அவர் அந்த ஆப்-பில் அப்டேட் செய்கின்றார். அதை தொடர்ந்து அவருக்கு 20 ரூபாய் சம்பாதித்ததாக அறிவிப்பு வருகின்றது. இதனை அந்த நபர் வீடியோவில் காண்பிக்கின்றார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானதை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் 20 ரூபாய் சம்பாதிக்க இவ்வளவு உழைக்க வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் மக்கள் டெலிவரி ஏஜெண்டுகளை மதிக்க வேண்டும் அவர்களிடம் கனிவான நடத்தையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.