Connect with us

பாரம்பரிய முறையில் மயில் கறி எப்படி செய்றதுன்னு பாத்துரலாம்கோ… சமையல் வீடியோவால் மாட்டிக்கிட்ட யூடியூபர்…!

national

பாரம்பரிய முறையில் மயில் கறி எப்படி செய்றதுன்னு பாத்துரலாம்கோ… சமையல் வீடியோவால் மாட்டிக்கிட்ட யூடியூபர்…!

பாரம்பரிய முறையில் மயில்கறி எப்படி செய்வது என்பது குறித்து வீடியோ வெளியிட்ட youtuber கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த youtuber ஒருவர் மயில்கறி சமைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றார். தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா என்ற மாவட்டத்தில் இருக்கும் தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அதனை தனது youtube பக்கத்தில் பதிவிட்டு வருபவர்.

அந்த வகையில் பாரம்பரிய முறைப்படி மயில்கறியை எப்படி செய்வது என்று சமைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். தேசிய பறவையான மயிலை சமைத்து அவர் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றத்தை உறுதி செய்த பிறகு அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடைப்போம் என்று சிர்சில்லா மாவட்ட எஸ்பி ராஜன்னா உறுதியளித்திருக்கின்றார். இந்த சர்ச்சைக்குப் பிறகு பிரணாய் தனது youtube பக்கத்தில் இருந்து மயில் கறி வீடியோவை நீக்கி இருக்கின்றார்.

இருப்பினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றியை சமைத்து வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மயில் கறியை சமைத்து வம்பில் மாட்டிக் கொண்டிருக்கின்றார் பிரணாய்.

More in national

To Top