national
பரபரப்பான சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு ரீல்ஸ்… youtuber அதிரடி கைது…!
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரிலீஸ் எடுத்த யூடியூப் வரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். youtubeபர் பறக்க விட்ட பணத்தை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது.
அந்த வீடியோவில் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவே நின்று பணத்தை பறக்க விடுகின்றார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுப்பதற்கு வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை நிறுத்தி பணத்தை எடுக்கின்றனர்.
நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை எடுக்க முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஹர்ஷா மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் 14 நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
View this post on Instagram