Connect with us

மும்பை ஷாஜகான் கல்லறையில்.. கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்… வைரலாகும் வீடியோ..!

national

மும்பை ஷாஜகான் கல்லறையில்.. கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்… வைரலாகும் வீடியோ..!

முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய நினைவுச்சின்னம் தாஜ்மஹால். இது உலகம் முழுவதும் காதலின் நினைவுச் சின்னமாக இருந்து வருகின்றது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் தற்போது சர்ச்சைக்குரிய இடமாக மாறி வருகின்றது.

தாஜ்மஹால் இதற்கு முன்பு ஒரு இந்து கோயிலாக இருந்ததாகவும், அங்கு சிவன் கோயிலுக்கான அடையாளங்கள் இருந்தது என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் பல காலமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். தேஜோ மஹால் என முன்பு அழைக்கப்பட்ட இந்த கோவில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டை வருகிறார்கள்.

இந்நிலையில் இந்து மகாசபையை சேர்ந்த ஷியாம் பாபு சிங், விக்னேஷ் சவுத்ரி என்ற இரண்டு இளைஞர்கள் தாஜ்மஹாலில் இருக்கும் மும்தாஜ் மற்றும் ஷாஜகானின் கல்லறை பகுதியில் கங்கை நீரை ஊற்றி இருக்கிறார்கள் .அங்குள்ள சுவர்களில் ஓம் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி இருக்கிறார்கள்.

சுற்றுலா பயணி போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டிலில் கங்கை நீரை எடுத்து வந்து கல்லறை அமைந்துள்ள இடத்தில் கங்கை நீரை ஊற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதையடுத்து இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் படுவைரலாகி சர்ச்சையாகி  வருகின்றது.

More in national

To Top