national
அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்… 115 அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்… வைரல் வீடியோ…!
ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றன. கனமழையால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மூன்று பேர் காணவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற பகுதியில் நீர்வீழ்ச்சிக்கு 26 வயதான பைரவா என்ற இளைஞர் நண்பர்களுடன் குடிக்க சென்றிருக்கின்றார். அப்போது ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசைப்பட்ட அவர் 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் எடுக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கின்றார்.
அங்கு கட்டப்பட்டிருந்த கயிறை பிடித்து அவர் தப்பிக்க முயன்றிருக்கின்றார். அங்கிருந்து அவரை நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால் கனமழையால் நீரோட்டம் அதிகமாக அந்த இளைஞன் இழுத்துச் சொல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்பு படையினர் நீண்ட நேரமாக உடலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.