உங்களுக்கு திருமணம் எப்போது…? காஷ்மீர் மாணவர்களுடன் ராகுல் காந்தி ருசிகர உரையாடல்…!

உங்களுக்கு திருமணம் எப்போது…? காஷ்மீர் மாணவர்களுடன் ராகுல் காந்தி ருசிகர உரையாடல்…!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமானார் ராகுல் காந்தியிடம் பொதுவாக வைக்கப்படும் கேள்விகளில் முக்கியமானது அவரின் திருமணம் பற்றியதுதான். 54 வயதாகும் அவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். கடந்த மே மாதம் உத்திர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட பொதுமக்களில் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று தான் கேட்டார்.

அதற்கு ராகுல் காந்தி விரைவில் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த முறை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் கல்லூரி மாணவருடன் நடத்திய உரையாடலின் போது ராகுல் காந்தியிடம் அதே கேள்வி எழுப்பப்பட்டது. அந்த உரையாடல் வீடியோ ராகுல் காந்தியின் youtube சேனலில் வெளியாகியிருக்கின்றது.

அதில் திருமணம் செய்து கொள்ளும்படி உங்களுக்கு நிர்ப்பந்தம் வருகின்றதா? என்று மாணவிகளிடம் ராகுல் காந்தி முதலில் கேள்வி கேட்டார். அதை மாணவிகள் மீண்டும் ராகுல் காந்தியிடம் கேட்டனர். அதற்கு இப்போது இல்லை 20, 30 ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றேன் என்று புன்னகையுடன் கூறினார்.

திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறீர்களா? என்று மாணவிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ராகுல் காந்தி நான் திட்டமிடுவது இல்லை. அதுவாக நடந்தால் நடக்கும் என்று கூறியிருந்தார். எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள் என்று மாணவிகள் தெரிவிக்க நான் அழைக்கின்றேன் என்று சிரிப்பொலிக்கும் மத்தியில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.