Latest News
காண்டாமிருகம் தாக்கி ஒருவர் மரணம்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!
அசாம் மாநிலத்தில் காண்டாமிருகம் ஒன்று கொடூரமாக தாக்கி ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அசாம் மாநிலத்தின் மோரிக்கான் பகுதியில் போபிடோரோ என்கின்ற வனவிலங்கு சரணாலயம் இருக்கின்றது. இந்த பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் துரத்தி துரத்தி கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
உயிரிழந்த நபர் அசாம் மாநிலம் கம்ரூட் மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து காண்டாமிருகம் எப்படி வெளியில் வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வனவிலங்கு துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
இருப்பினும் பைக்கில் சென்று கொண்டிருந்த நபரை காண்டாமிருகம் துரத்தி கொடூரமான முறையில் கொள்ளும் வீடியோவானது இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.