ரேபிடோவில் பயணம் செய்த இளம்பெண்… டிரைவர் செய்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!

ரேபிடோவில் பயணம் செய்த இளம்பெண்… டிரைவர் செய்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!

ரேபிடோவில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் பாகலகுண்டே எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் வேலைக்கு செல்வதற்கு டாக்ஸி ஒன்றை முன்பதிவு செய்து இருக்கின்றார். பதிவு செய்ததன் படி வாலிபர் ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸியில் வந்திருக்கின்றார்.

அவர் இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் ட்ராப் செய்வதற்காக அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் இளம்பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதனை கண்டித்து இருக்கின்றார்.

இருப்பினும் வாலிபர் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பைக் நிறுத்தி பின்னர் டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். பின்னர் அந்த வழியாக வந்த போலீசார் வாலிபரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பைக் டாக்ஸி டிரைவர் என்பதும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதும் தெரிய வந்தது. பின்னர் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வாலிபர் ஜெய்ப்பூரை சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.