national
அவகேடோ சாகுபடி செய்து… ஒரு கோடி வருமானம் ஈட்டும் வாலிபர்… எப்படி தெரியுமா…?
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்த ஹர்ஷித் கோதா என்ற நபர் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் 20 ஆம் ஆண்டு வரை வணிக படிப்பை படித்து முடித்து இருக்கின்றார். வணிக மாணவராக இருந்த இவர் தற்போது விவசாயியாக மாறி இருக்கின்றார். இங்கிலாந்து சென்றபோது அவகேடோ பழங்கள் எளிதாக கிடைத்தன. ஆரோக்கியம் மற்றும் உடல்தகுதி ஆகியவற்றில் நான் நாட்டம் கொண்டதால் சத்துக்கள் நிறைந்த பழங்களை எப்போதும் விரும்பி சாப்பிடுவேன்.
கோடை காலங்களில் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் அவகேடோ பழங்களை என்னால் வாங்க முடியவில்லை. மேலும் இங்கு கிடைக்கும் அவகேடோ பழங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தது. இதனால் அவகேடோ விவசாயத்தை தொடங்க வேண்டும் என்று எண்ணினேன். பழங்களின் இருப்பு மற்றும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக அதைப்பற்றி முழுவதுமாக ஆராய்ச்சி செய்து தெரிந்து கொண்டேன்.
இங்கிலாந்தில் கிடைக்கும் அவகேடோ பழங்கள் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை கண்டுபிடித்தேன். அவகேடோ பழங்களை பயிரிட்டு ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்து வந்தது. அவரை சிந்திக்க வைத்தது. இந்த உண்மையை கண்டு ஆச்சரியம் அடைந்த அவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போபாலில் அவகேட்டோ பழத்தை பயிரிடுவதில் நாட்டம் செலுத்தினார்.
அவகேடோ சாகுபடி இந்தியாவிற்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த விவசாயத்தை தொடங்கினார். மேலும் இஸ்ரேலிய கிராமத்தில் தங்குவதற்கு உணவுக்கும் ஏற்பாடு செய்து ஹர்ஷித் அங்கு சென்று ஒன்றரை மாதங்கள் இருந்து கூலித் தொழிலாளி போல் வேலை செய்து அவகேடோ சாகுபடி குறித்து தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளை பற்றி தெரிந்து கொண்டார்.
பயிற்சி முடித்த ஹர்ஷித் இந்தியா திரும்பினார். இருப்பினும் மண்ணின் நிலை நீர் இருப்பு மற்றும் கால நிலையாகி அவற்றை ஆய்வு செய்வது அவருக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. இதற்காக இஸ்ரேலில் இருந்து தனது வழிகாட்டியை தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் போபாலில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளின் மதிப்பை ஆய்வு செய்து அவகேடோ வகைகளை வெற்றிகரமாக வளர்க்கலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து 10 ஏக்கர் நிலத்தில் அவகேடோ சாகுபடி செய்து ஹர்ஷித் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றார். இது தொடர்பாக அவர் கூறும் போது செடியின் விலை அதன் வயதை பொறுத்து ஒன்றரை வருட செடிகள் 2500 ரூபாய்க்கும், இரண்டு வருட செடிகள் 3000 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிட்டதாக வேறுபாடு இருக்கின்றது. பழங்கள் 250 முதல் 300 வரையும் சில்லறை விற்பனையில் 200 முதல் 250 ரூபாய் வரையிலும் பழங்கள் விற்பனையாகி வருவதாக கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் அவகேடோ இறக்குமதி சுமார் 400 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ப்ளூபெர்ரி மற்றும் அவகேடோ பழங்கள் வேகமாக வளர்ந்து வரும் சந்தையை கொண்ட பழங்கள் என்று அவர் கூறியிருந்தார்.