Latest News
பெண் மருத்துவர்கள் எதற்காக இரவில் வேலைக்கு செல்லக்கூடாது… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!
பெண் மருத்துவர்கள் எதற்காக இரவில் வேலைக்கு செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கின்றது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத் என்ற நபரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
மம்தா தலைமையிலான மேற்குவங்க திருவண்ணாமலை காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி வருவதாக நம் மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். செப்டம்பர் 10ஆம் தேதி மாலை கொல்கத்தா மருத்துவர்கள் தங்களது போராட்டங்களை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையை மீறி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதுகாப்பை கருதி பெண் மருத்துவர்கள் இரவு பணியை தவிர்க்கும் படி அறிவித்த மேற்குவங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பிப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் மருத்துவர்கள் இரவில் பணிக்கு செல்லக்கூடாது என்று கூற முடியாது.
பெண்கள் சலுகைகளை எதிர் நோக்கவில்லை. சம வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார்கள். அனைத்து சூழ்நிலைகளிலும் பணி புரிவதற்கு பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உங்களின் கடமை இரவு பணியை செய்யக்கூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது. இரவு பணியை பெண் மருத்துவர்கள் செய்வதை தவிர்க்குமாறு மேற்குவங்க அரசு உத்தரவிட முடியாது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டிருக்கின்றார்.